ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருள் வழங்கிய முன்னாள் அமைச்சர் SP சண்முகநாதன் MLA

ஊரடங்கு உத்தரவினால் தினக்கூலியினர் பலரும் தனது அன்றாட தேவைகளை பெற முடியாமல் தினமும் பாதிக்கப்பட்டு வருவதை தெரிந்து கொண்ட தன்னார்வலர்களும், காவல்துறையினரும், ஏனைய சமூக அமைப்புகளும் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளும் இவர்களுக்கான தேவைகளை கேட்டு அறிந்து தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி மாநகர அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் என 1500 பயனாளிகளுக்கு கொரோனா வைரஸ் நிவாரண உதவியாக 10 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம்பருப்பு தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் SP சண்முகநாதன் MLA அவர்களின் சொந்த நிதியில் மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து மாவட்ட கழக முக்கிய நிர்வாகிகள் வழங்கி வருகிறார்கள்.