திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி 97 வது பிறந்த நாள் பழைய பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது – சாத்தான்குளம்

சாத்தான்குளம் ஒன்றிய, நகர திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி 97 வது பிறந்த நாள் பழைய பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி முன்னதாக ஒன்றிய திமுக செயலர் ஏ.எஸ். ஜோசப் தலைமையில் நகர செயலர் மகா.இளங்கோ முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்கள் 97பேர்களுக்கு தலா 5கிலோ அரிசி பை வழங்கப்பட்டது.

இதில் நகர துணை செயலர் வெள்ளப்பாண்டி, ஒன்றிய பொருளாளர் வேல்துரை, நகர இளைஞரணி செயலர் முருகன், நகர பொருளாளர் சந்திரன், முன்னாள் பேருராட்சி மன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.