செல்ல பிராணியுடன் ஃபுட் டெலிவரி – சென்னை

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் பைரவி என்ற நாயை வளர்த்து வருகிறார். இவரின் வீட்டில் அனைவரும் வேலைக்குச் செல்வதால் பைரு வீட்டில் தனியாக இருக்கும் என்று எண்ணி , ஸ்கூட்டியின் முன்பக்கம் அதனை நிற்க வைத்துக் கொண்டு டெலிவரி செய்யும் இடத்துக்கெல்லாம் அதனை அழைத்துச் சென்று வருகிறார். அவரிடம் அதைப் பற்றி பேசிய போது பைருக்கு தற்போது ஒன்றரை வயது ஆகிறது. இது வாங்கியதில் இருந்தே என்னுடன் தான் டெலிவரி செய்யும் இடத்துக்கெல்லாம் என் பைக்கின் முன் பக்கம் சமத்தாக நின்று கொண்டு வரும். டெலிவரி செய்யும் இடத்துக்குச் செல்லும் போது, அவர்களுக்கும் இதனால் எந்த தொல்லையும் ஏற்படாது. பைரு என்னுடனே இருப்பதால் எனக்கு வேலைச் சுமை தெரியாது என்று கூறியுள்ளார். மக்கள் அனைவரும் அவரை வியப்புடன் பார்த்து வருகின்றனர்.