தங்குகடலுக்கு சென்ற தருவைகுளம் விசைப்படகு மீனவர்கள் இன்று கரை திரும்பினார்கள்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்திற்கு உட்பட்ட தருவைகுளம் விசைப்படகு மீனவர்கள் தங்குகடலுக்கு சென்று இன்று காலை கரை திரும்பி உள்ளார்கள்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்திற்கு உட்பட்ட தருவைகுளம் விசைப்படகு மீனவர்கள் தங்குகடல் செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக மத்திய அரசு மீன்பிடி தடைக்காலத்தை 45 நாட்களாக குறைத்திருந்த நிலையில் ஜூன் 5-ம் தேதி கடலுக்கு சென்ற தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கரைக்கு திரும்பினார்கள்.

தங்குகடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் சூறை மீன் அதிக அளவில் கிடைத்துள்ளது. போதுமான அளவில் மீன்கள் கிடைக்கவில்லை என்றாலும் ஓரளவு மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்களிடம் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாளை ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் விசைப்படகு வரவுள்ளது. இனி நல்லமுறையில் மீன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தருவைகுளத்து மீனவர்கள்.