விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க இன்று கடலுக்கு சென்றனர் : தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை 120 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மேலும் மீனவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விசைப்படகு மீனவா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தினமும் 120 படகுகள் வீதம் கடலுக்குச் செல்ல அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், வெளியூா் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீன் கொள்முதலுக்கு வரும் வியாபாரிகள் கட்டாயம் கை கழுவி சுத்தம் செய்த பின்னரே மீன்பிடித் துறைமுகத்துக்குள் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை 5 மணிக்கு 120 படகுகள் கடலுக்குச் சென்றது.