தூ.டியில் 79 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்குதளம் : அமைச்சர் திரு.ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு 79 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்கு தளம் அமைக்கும் கருத்துரு அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. மாண்புமிகு மீன்வளம் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் தெரிவித்ததாவது : தூத்துக்குடி மாவட்டம் பெரிய தொகையில் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய்க்கு கடல் அரிப்பை தடுக்கும் பணிகளுக்கு அரசாணை போடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்பட இருக்கிறது. அதேபோன்று வீரப்பாண்டிய பட்டணத்தில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கடல் அரிப்பு தடுப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அமைதி நகர், ஆலந்தலை, வீரபாண்டியன்பட்டணம், மணப்பாடு, குலசேகரப்பட்டினம், ஏலக்கூடம் ஆகியவற்றுக்கு இரண்டரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மணப்பாட்டில் 79 கோடி ரூபாய் செலவில் மீன் இறக்குதளம் அமைக்கும் கருத்துரு அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது என சட்டமன்றத்தில் மாண்புமிகு மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார்.