ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து : தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் சில அலுவலக அறைகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அங்கு இன்வெர்ட்டருக்கான பேட்டரிகள் வைக்கப்பட்டு இருந்த அறையில் நேற்று திடீரென ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. உடனடியாக ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் விரைந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.