ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முடித்திருத்தும் தொழிலாளர்கள்

கொரோனா ஊராடங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கக்கூறி தூத்துக்குடி மாவட்ட முடித்திருத்தும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்கள் மனுவில் கூறியதாவது: நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முடித்திருத்தும் தொழிலாளர்கள் 500க்கும் கூடுதலாக உள்ளனர். 48 நாட்களாக பிறப்பிக்கப்பட்ட ஊராடங்கால் முடித்திருத்தும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. முடித்திருத்தும் தொழிலாளர்கள் வீட்டு வாடகை, கடை வாடகை , மின்சார கட்டணம் கட்ட முடியாமலும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே முடித்திருத்தும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனே நிவாரண தொகை வழங்க வேண்டும். முடித்திருத்தும் தொழிலுக்கான நேரத்தை வழி வகித்து தர வேண்டும் என்று தூத்துக்குடி முடித்திருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மாவட்ட தலைவர் K.சண்முகம், மாவட்ட செயலாளர் K. மனோகரன், மாவட்ட துணை செயலாளர் N. நல்ல தம்பி,மாவட்ட பொருளாளர் G. பெருமாள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சார்பில் மனு வழங்கப்பட்டது.