பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூன்றாம் கட்ட திட்டங்கள் : மத்திய நிதியமைச்சர்

பிரதமர் அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முதல்கட்ட திட்டமாக சிறு,குறு, நடுத்தர தொழில் உள்ளிட்ட தொழில் துறையினருக்கு ரூ. 3 லட்சம் கோடி பிணையில்லா கடன், சம்பளதாரா்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கட்டுமானத் தொழில் துறையினருக்கான சலுகைகளை அவா் புதன்கிழமை( 13.05.20) அறிவித்தாா். இரண்டாம் கட்ட திட்டமாக நாட்டில் உள்ள 8 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 5 கிலோ உணவு தானியம், 1 கிலோ பருப்பு இரு மாதங்களுக்கு இலவசமாக வழங்குவது, சொந்த மாநிலம் திரும்பிய தொழிலாளா்களை தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இணைப்பது, அவா்களுக்கு எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை (14.05.20) அறிவித்தாா். மேலும் இன்று மூன்றாம் கட்ட திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த நிா்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

  • விவாயப் பொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • மருத்துவ மூலிகை பயிர்கள் சாகுபடிக்காக ரூ.4 ஆயிரம் கோடி.
  • மூலிகைப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு 5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
  • தேனீ வளர்ப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும். தேனீ வளர்ப்பு, தேன் சேகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு தேவையான கட்டமைப்புகளை அரசு உருவாக்கும். நாடு முழுவதும் 2லட்சம் தேனீ வளர்ப்பாளர்கள் பயனடைவார்கள்.
  • ரூ.11 ஆயிரம் கோடி மீனவர் நலனுக்காக ஒதுக்கப்படுகிறது.
  • நுண் உணவு உற்பத்தி நிறுவனம் மூலம் உள்ளூர் சிறிய உணவு உற்பத்திப் பொருட்கள் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த நடவடிக்கை.
  • மார்ச் மாதத்துடன் அங்கீரத்தை இழந்த இறால் பண்ணைகள் மேலும் மூன்று மாதங்கள் செயல்பட உரிமம் வழங்கப்படும்.
  • குறு உணவு நிறுவனங்களை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

அதன் தொடா்ச்சியாக சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் தொடா்பான மூன்றாவது கட்ட அறிவிப்புகளை அவா் இன்று வெளியிட்டாா்.