இறுதி வாக்காளர் பட்டியல் தயார் – தமிழகம்

இந்திய தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூகிள் பிளே ஸ்டோரில்’ voter helpline App’ ஐ டவுன்லோடு செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் படி தமிழகத்தில் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,02,54,172 பேரும், பெண் வாக்காளர்கள் 3,10,45,969 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 6,474 பேர் உள்ளனர்.