மக்கள் நலன் கருதி கொரோனா நோய் பரவாமல் தடுக்க ஐந்தாம் கட்ட கபசுரக் குடிநீர்: தருவைகுளம்

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் மக்கள் நலன் கருதி கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இன்று ஐந்தாம் கட்ட கபசுரக் குடிநீர் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. இன்று காலை 7.00 மணியளவில் தருவைக்குளம் மேலத்தெரு, தெற்குத்தெரு, சுண்டன் பச்சேரி மக்கள் பயன்பெறும் வகையில் தருவைக்குளம் மேலூர் பஸ் ஸ்டாப் அருகில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் இலவச கபசுரக் குடிநீர் மற்றும் தருவைகுளம் சமூக ஆர்வலர் கென்னடி ராஜ் அவர்கள் சார்பில் இலவச முகக்கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் கபசுரக்குடிநீரை பெற்றுச் சென்றார்கள். இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே அவர்கள், தருவைகுளம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர், முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர், மற்றும் தருவைகுளம் அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமலதாசன் (எ) பழம், காமராஜர் நற்பணி மன்ற பொருளாளர் தேவ திரவியம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சூசை அந்தோணி, செல்வராஜ், பவுல் ராஜ், வில்சன், கிறிஸ்டின் ராஜ், வெல்லிங்டன், ராபின், ராஜன், கார்த்திக், ஜெயக்குமார்,கெய்ட்டின் ராஜ், டிக்கு ரோஸ், நீக்குலாஸ், பெட்ரிக், ராஜன், வில்சன், தருவைகுளம் சமூக ஆர்வலர் கென்னடி ராஜ் மற்றும் பொதுநலத் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் S.A. லாரன்ஸ் அவர்கள் செய்திருந்தார்.