சுங்கச் சாவடியில் கட்டணம் : நெடுஞ்சாலை துறை ஆணையம் உத்தரவு

சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மின்னணு கட்டண வசூல் முறை டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அத்துடன் பாஸ்டேக் அட்டையை டிசம்பர் 1-ம் தேதி வரை இலவசமாக வழங்குமாறு வங்கிகளுக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஆர்.சி. (வாகனப் பதிவு சான்று), புகைப்படம், அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கி பாஸ்டேக் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். எனவே டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு, அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஒரே ஒரு பாதையில் மட்டுமே ரொக்கப் பணம் செலுத்தும் முறை அனுமதிக்கப்படும். பின்பு மற்ற பாதைகள் அனைத்திலும் பாஸ்டேக் அட்டை பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மீறி பாஸ்டேக் பாதையில் ரொக்கமாக செலுத்தினால், சுங்க கட்டணம் 2 மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படும். இதில், ஒரு மடங்கு அபராத கட்டணமாக இருக்கும் என தேசிய நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.