வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்

கோவில்பட்டி பகுதியில், ஊரடங்கால் பாதிப்படைந்த சிறு குறு விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று அரசின் முழு ஊரடங்கு உத்தரவால் பாதிப்படைந்த சிறு குறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் வடக்கு திட்டங்களும், கரிசல்குளம், அச்சங்குளம், கோட்டையூர், வேப்பங்குளம், இலந்தைபட்டி கிராமங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக இன்று விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகளின் கருப்புக் கொடி போரட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

Credit : tutyonline