சாத்தான்குளம் வட்டார விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்

சாத்தான்குளம் வட்டார விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :-

சாத்தான்குளம் வட்டாரத்தில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தினால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே நீரினைச் சிக்கனமாக பயன்படுத்திட விவசாயிகள் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் மூலம் பயிர் சாகுபடி செய்திட வேண்டும் . இதன் மூலம் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நீரினைச் சேமிக்கலாம். களைகள் பெருமளவு குறையும். திரவ உரங்களை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பயிர்களுக்கு அளிக்கலாம்.இத்திட்டத்தில் இணையும் சிறுகுறு விவசாயிகளுக்கு முழு மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

தென்னை மற்றும் பருத்திப் பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனமும் நிலக்கடலைப் பயிருக்கு தெளிப்பு நீர்பாசனமும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் மூலம் செய்து தரப் படுகிறது.இது தவிர இத்திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு துணை நிலை நீர் மேலாண்மை பணிகள் திட்டத்தில் 50சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25,000 மானியம், ஆயில் என்ஜீன் அல்லது மின் மோட்டார் அமைக்க ரூ. 15 ஆயிரம் மானியம், பைப்லைன் அமைக்க ரூ. 10 ஆயிரம் மானியம், தரைமட்ட நீர்த் தொட்டி அமைத்திட அதிகபட்சமாக ரூ40,000; மானிமாக வழங்கப்படுகிறது.

துணைநிலை நீலீ; மேலாண்மை திட்டத்தில் மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் திட்டம் ஸ்ரீவெங்கடேசபுரம் குறுவட்ட விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் விபரங்களுக்கு சாத்தான்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுதாமதி தெரிவித்துள்ளார்.