வாழை இலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி: தூத்துக்குடி

ஊரடங்கு தளர்வில் ஓட்டல்கள் திறக்கப்பட்டதால், வாழை இலை விலை உயர்ந்துள்ளது, இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு காரணமாக விழாக்கள் நடைபெறாதாலும், பெரும்பாலான ஓட்டல்கள் திறக்கப்படாததால், வாழை இலைகளின் தேவை குறைந்து விலை வீழ்ச்சி அடைந்தது ஊரடங்கின் போது சில ஓட்டல்களில் மட்டுமே உணவு பார்சல் வழங்கப்பட்டது

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வில், அனைத்து ஓட்டல்களும் திறக்கப்பட்டு அங்கு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து உணவு சாப்பிட அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாழை இலைகளின் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.

வாழை இலை விலை உயர்வு ஊரடங்கின் போது, தூத்துக்குடி மார்க்கெட்டில் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட வாழை இலைக்கட்டு, தற்போது ரூ.700 ஆக விலை உயர்ந்துள்ளது. இதேபோன்று வாழைத்தார்களின் விலையும் உயர்ந்துள்ளது, இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் வாழை இலைக்கட்டுகளையும், வாழைத்தார்களையும் விற்பனைக்காக தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர்.