“விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” தேதி மாற்றம் – தூத்துக்குடி.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” வருகின்ற 20.02.2020ம் ஆண்டு நடக்க இருந்தன. ஆனால் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு மூன்றாவது வியாழக்கிழமை 20.02.2020-க்குப் பதிலாக 27.02.2020 நான்காவது வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.