தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்றுநடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணையாத விவசாயிகள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு காப்பீட்டு தொகையை செலுத்தி பயன்பெற வேண்டும். மற்றும் உழவன் செயலி மூலம் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகள் நன்றாக தெரிந்துகொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும், 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 225 மனுக்களில் வேளாண்மை சார்ந்த 168 மனுக்களும், பிறதுறைகளை சார்ந்த 57 மனுக்களுக்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் விவசாயிகளுக்கு அந்தக் கூட்டத்திலே பதில்கள் அளிக்கப்பட்டது.