தன் வயலில் விழுந்த மழை நீரை வணங்கி முத்தமிட்ட விவசாயியின் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வாராது வந்த மாமணியாய் நிலத்தில் இறங்கிய மழை நீரைக் கண்டு, விவசாயியின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் ஒரு புகைப்படமாக இப்போது உலா வருகிறது.
மழை பொய்த்தால் நிலைமை எவ்வாறு கடினமாக இருக்கும் என்பதற்கு இரு தெலுங்கு மாநிலங்களின் தற்போதைய நிலையே உதாரணம்.
பல ஆண்டுகளாக தொடர்ந்து சரியான மழை இன்றி தத்தளித்த நிலைமாறி இன்று ஒரேயடியாக கொட்டித் தீர்த்த கன மழை விவசாயிகளை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு நாள் பெய்த பெருமழைக்கே கால்வாய்களும் ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. காய்ந்து கிடந்த தன் வயல் நனைந்து மழை நீரால் நிறைந்த விவசாயியின் ஆனந்தம் வயலை வணங்கி முத்தமிடத் தூண்டியது.
Source : Dhinasari Epaper