விபத்தில் விவசாயி பலி – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர், நயினார் குளத்தைச் சேர்ந்தவர் , விவசாயி சுந்தர்ராஜ் (65) நேற்று மாலையில், அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த கார் மோதி படுகாயம் அடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்திய போது அதே ஊரைச் சேர்ந்த கார் டிரைவர் அற்புதராஜ் (49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.