தரமில்லாத ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி விவசாயி கண்டனம் – மயிலாடுதுறை

நாகை மாவட்டத்தில் சமீப காலமாக ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமாக இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி தரமாக இல்லை எனக்கூறி அதை விவசாயி ஒருவர் எனக்கு வழங்கப்பட்ட அரிசி குண்டரிசியாக உள்ளது இதனை மனிதன் சமைத்து சாப்பிட முடியாது. ஆடு, மாடாவது திங்கட்டும்  என கூறி ரோட்டில் கொட்டி கண்டனம் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.