உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு விலங்குகளின் முகமூடி அணிந்து மரக்கன்றுகள் நடவு செய்து அசத்திய மாணவர்கள்

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் தேசிய பசுமைப் படை, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி சிந்தாமணி நகரில்.உலக விலங்குகள் தின விழா நடைபெற்றது.ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் தேதி இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசியின் நினைவு தினத்தை உலக விலங்குகள் தினமாக விலங்கினங்களை பாதுகாக்க கடைபிடிக்கப்படுகிறது.கோவில்பட்டி சிந்தாமணி நகரில் நடந்த விழாவில் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் யானை, புலி உருவம் உள்ள விலங்குகளின் முகமூடி அணிந்து மரங்களை நட்டு வன உயிரினங்களை பாதுகாக்கவும் கலாச்சார ரீதியாகவும், மருந்து தயாரிப்புகளுக்கும் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுத்து நிறுத்துவும் விலங்கினங்களுக்கு எதிரான அனைத்து செயல்களையும் தடுத்து நிறுத்த உறுதி மொழி எடுத்துக் கொண்டு மரக்கன்றுகளை நட்டினர். பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். தேசிய பசுமைப் படை ஆசிரியர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிந்தாமணி நகர் வளர்ச்சிக் குழு உறுப்பினர் சுபாஷ் அனைவரையும் வரவேற்றார்.பள்ளி மாணவர்கள் யானை, புலி உருவம் உள்ள விலங்குகளின் முகமூடி அணிந்து மரக்கன்றுகளை நடவு செய்தனர்.இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், நடராஜன், காளியப்பன், சிந்தாமணி நகர் வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் இளங்கோ, முத்தையா, உள்பட பலர் முக கவசம் அணிந்தும் சானிடைசர் பயன்படுத்தியும் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *