தருவைகுளம் கிராம மக்களுக்கு முகக் கவசம் வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட தருவைகுளம் கிராம மக்களுக்கு முகக் கவசம் வழங்கும் நிகழ்வு

கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் பல சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் இருந்து வரக்கூடிய மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள், மேலும் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு அறிவிப்பின் படி அனைவரும் கட்டாய முக கவசம் அணியும் படி உத்தரவு பிறக்கபிக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த திரு. கென்னடிராஜ் அவர்கள் தங்கள் கிராம மக்களுக்கு முகக்கவசம் வழங்கினார், மேலும் முகக் கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது என்ற ரீதியில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்களை இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். இவரின் இச்சேவைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.