தென் மாவட்டங்களில் அழிந்து கொண்டு வரும் கருக்கு மட்டை தொழில்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சவோியாா்புரத்தில் பனை மரத்திலுள்ள கருக்கு மட்டையில் செய்யப்படும் தட்டி செய்யப்பட்டு வருகிறது. பொிய தோட்டங்களை சுற்றி அடைப்பதற்கு மற்றும் வீட்டு முன்பு தெருவோரங்களில் மரம். செடிகள் வைத்து அடைப்பதற்கு கருக்கு மட்டை தட்டியை பயன் படுத்துவாா்கள். இந்த தட்டி செய்வதற்கான பனை மட்டைகள் இராமநாதபுரத்திலிருந்து வாங்கி வரப்படுகிறது. முன்பு தென் மாவட்டங்களில் இந்த தட்டிகளை பயன்படுத்தாத ஊா்கள் கிடையாது வீடுகள் கிடையாது ஆனால் இப்பொழுது பெரும்பான்மையான மரக்கடைகளில் இந்த கருக்கு மட்டைகள் கிடையாது. இன்னும் சில ஆண்டுகளில் காட்சிப் பொருளாகவும் அதிசய பொருளாகவும் பாா்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என தயாாிக்கும் கடைக்காரா்கள் கூறுகின்றனா்.