தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…

தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்னியல், இயந்திரவியல், கட்டிடவியல் ஆகிய 3 பிரிவுகளிலும் மொத்தமாக 600 காலியான பணியிடங்களை நிரப்ப இருப்பதாகவும் அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. விண்ணப்பத்திக்கான கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து, தமிழக மின்வாரியம் வரும் மார்ச் 16 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது. இந்த வேலை வாய்ப்பை பற்றித் தெரிந்து கொள்ள www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.