நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கியவர்களின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு

மருத்துவ படிப்பிற்க்கான நீட் தேர்வீல் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கு நீதிமன்ற காவல் மேலும் 15 நாள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கல்லூரி மாணவன் ராகுல், அவரின் தந்தை டேவிஸ் மற்றும் மாணவர் பிரவீன், அவரின் தந்தை சரவணகுமார் ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்களது நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 25ஆம் தேதி வரை 4 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து நான்கு பேர் மீண்டும் தேனி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.