தருவைகுளம் பங்குதந்தையின் சிறப்பான பணி – தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் ஊர் மக்களை அழகாக மிகவும் அருமையாக வழி நடத்தும் பங்கு தந்தை அருட்திரு எட்வர்ட் ஜோ. அரசாங்கம் 144 தடை உத்தரவு அறிவிக்கும் முன்பு சீனாவில் கொரானோ வைரஸ் பரவி மக்கள் அதிகமானோர்கள் இறக்க ஆரம்பித்தவுடன் கோவில் ஒலிபெருக்கி மூலமாக காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மக்கள் அனைவருக்கும் முகமூடி (மாஸ்க்) தயாாிக்க தருவைக்குளம் விண்சென்ட் தே பவுல் சபையில் உள்ள மகளிர் மூலமாக தயாாித்து மக்கள் அனைவருக்கும் கொடுத்து உதுவுகிறார் பங்கு தந்தை. ஊர் நிர்வாகிகளும், ஊர் மக்களும் அருட்தந்தையர் அவர்களுடன் இனைந்து பணி செய்து வருகின்றனர்.