அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் பேருந்து நிலையம் அருகில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் ஏற்பாட்டில் சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள், டெய்லர்கள் மற்றும் மண் பானை தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (30.04.20) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் செ.ராஜூ அவர்கள் மொத்தம் 136 நபர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுய ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கான மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவது தவிர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு கொண்டு வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சி என 19 பேரூராட்சி மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் 5000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஏற்கனவே கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அரசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இன்று விளாத்திகுளம் வட்டம் புதூர் பகுதியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் சார்பில் சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் செய்யும் தொழிலாளர்கள், டெய்லர்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் என மொத்தம் 136 நபர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும். ஒரே இடத்தில் கூட்டமாக சென்று காய்கறிகள் வாங்குவதை தவிர்த்து தங்கள் பகுதிகளில் வரும் நடமாடும் காய்கறி அங்காடி வாகனத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்கள் முக கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்போது காரானா வைரஸ் தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் திரு.மோகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. விஜயா, விளாத்திகுளம் வட்டாட்சியர் திரு. ராஜ்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. சுசீலா தனஞ்செயன், செயல் அலுவலர் திரு.கணேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு.ஜெயவேல், முக்கிய பிரமுகர்கள் திரு. ஆழ்வார் உதயகுமார், திரு. ஞான குரு சாமி, திரு. ஆன்ட்டி மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.