1000 குடும்பங்களுக்கு நிவாரண உதவி : அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர்

அஇஅதிமு கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் தொடர்ந்து 25 நாட்கள் ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்து வருகிறார். இன்று 26வது நாளில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாத்திமா நகர், இந்திரா நகர், PVR புரம், புல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 400 குடும்பங்களுக்கும் இன்று (14.05.20) காலை 10.00மணிக்கு சுமங்கலி திருமண மண்டபம் எதிரில் வைத்து அரிசி பைகளை வழங்கினார்கள்.

மேலும் மாலை 5.00மணிக்கு தொம்மையார் கோவில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் வைத்து கணேசபுரம், மறக்குடித்தெரு, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 600 குடும்பங்களுக்கும் அரிசி பைகளை வழங்கினார்கள்.