650 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என புளியம்பட்டியில் 200 நபர்களுக்கும், ஒட்டநத்தத்தில் 200 நபர்களுக்கும், ஓட்டப்பிடாரம் பகுதியில் 250 நபர்கள் என மொத்தம் 650 நபர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முன்னிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர்கள் ரகு, எலிசபெத் (சமூக பாதுகாப்பு திட்டம்), மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஓட்டப்பிடாரம் ரவிசந்திரன், வட்டார வளர்சி அலுவலர்கள் வளர்மதி, கெலன் பொன்மணி, மாவட்ட கவுன்சிலர் தேவராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் மூக்கம்மாள், கோபி, ஆலோசனைமரியான், ஊராட்சி தலைவர்கள் சரிதா (ஒட்டநத்தம்), அய்யாத்துறை (புளியம்பட்டி), ஜஸ்டின், கண்ணன், சுடலைமணி, ரவி, கருப்புசாமி, மாடசாமி, முக்கிய பிரமுகர்கள் தர்மராஜ், முத்துசாமி, மணி, ஆரோக்கியம், முருகராஜ், குமரேசன், எம்.எஸ்.கண்ணன், முத்துசாமி, ஆதிலிங்கம், பரமசிவன், கிருபாகரன், அழகுராஜா, பெருமாள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.