250 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : உயர்நீதிமன்ற நீதியரசர்

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை கூட்டாம்புளியில் பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்கள் 250 குடும்பங்களுக்கு 10கி அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (01.05.20) நடைபெற்றது. நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் கலந்துகொண்டு ஏழை எளிய மக்கள் 250 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  முன்னிலை வகித்தார்..

பின்னர் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.எஸ.சுந்தர் தெரிவித்தாவது: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது மாவட்டத்தில் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரும்போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.  காய்கறி சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். புதுக்கோட்டை கூட்டாம்புளி பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுய ஊரடங்கு காலத்தில் பணிகளுக்கு செல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் ஏற்பாட்டில் 250 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. பொதுமக்கள் சுய ஊரடங்கு உத்தரவினை முழுமையாக கடைபிடித்து கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் தலைவர் ராமச்சந்திரன், இயக்குநர்கள் ஜவககுமார், நட்டர், சந்தனக்கனி, புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் ஜேக்சன்துரைமணி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.