தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குளத்தூர், வேம்பார், பெரியசாமிபுரம் ஆகிய பகுதிகளில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 900 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை கழக பாராளுமன்ற குழு துணைத் தலைவரும், கழக மகளிரணி மாநில செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்பி., வழங்கினார்.!
உடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!