ஊர்காவல் படையினருக்கு அத்தியாவசிய பொருட்கள் : டிஎஸ்பி பிரகாஷ் வழங்கினார்

தூத்துக்குடியில் காவல்துறையினர் உடன் இணைந்து  பணியாற்றி வரும் ஊர்காவல் படையினருக்கு  அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. 
கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடியில் காவல்துறையினர் உடன் இணைந்து  பணியாற்றி வரும் ஊர்காவல் படையினர் 50 பேருக்கு ரூ.1200 மதிப்பிலான அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஊர்காவல் படை ஏரியா கமாண்டர் பாலமுருகன், துணை கமாண்டர் கௌசல்யா ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில், அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பையினை தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், ஊர்காவல் படையினருக்கு வழங்கி தொடங்கி வைத்தாா். இதில் தென்பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், உதவி ஆய்வாளர் ராஜாமணி, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் ஊர்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

Credits : tutyonline