அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அத்தியவாசிய பொருட்கள் வழங்கப்பட்டது – கிருஷ்ணராஜபுரம்

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தமிழகத்தில் பல ஏழை எளிய மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர் சரத்குமார் அவர்களின் உத்தரவின் படி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சார்பாக பகுதி செயலாளர் S. லிங்கராஜா அவர்கள் தலைமையில் பகுதி இளைஞரணி செயலாளர் K. கருவேல்முத்து மற்றும் வட்ட செயலாளர்கள் முன்னிலையில் கிருஷ்ணராஜபுரம் மக்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் வழங்கப்பட்டது.