பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் : செங்கோட்டையன்

ஜூன் 1 முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது பள்ளிக் கல்வித்துறை.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும், மேலும் அவர்களுக்கு உணவு வசதி செய்து தரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.