சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் மாற்றுத் திறனாளி இளைஞா்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோந்தவா் மணிகண்டன் (36). மாற்றுத் திறனாளியான இவா், பொதுமக்களிடையே சுற்றுச் சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டிச் செல்கிறாா். கன்னியாகுமரியிலிருந்து டிசம்பா் 13 ஆம் தேதி பயணம் தொடங்கியுள்ளாா். வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் விழிப்புணா்வு பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும், அதன்பிறகு தமிழக முதல்வரை சந்தித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கோரிக்கை மனுவை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தாா்.