படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத இன்ஜினீயர் தற்கொலை – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை வன்னியனூரைச் சேர்ந்தவர் சரவணகுமார் (27) இன்ஜினீயரிங் படித்து விட்டு, பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடி வந்தனர். ஆனாலும் அவர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைக்காத விரக்தியில் சரவணகுமார் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவில் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் குளியல் அறைக்கு சென்று, கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்பு உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.