நெருக்கடி கால மேலாண்மைக்குழு : எம்பவர் சங்கர், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு

நெருக்கடி கால மேலாண்மைக்குழு கூட்டப்பட வேண்டுமென எம்பவர் சங்கர், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியுள்ளதாவது : தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் பேரிடர் மேலாண்மை சட்டப்படி நுகர்வோர் பிரதிநிதிகள், அரசு சாரா அமைப்பினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய நெருக்கடி கால மேலாண்மைக்குழு  அமைக்கப்பட்டுள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக செய்வதற்கு நெருக்கடி கால மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இக்குழுவின் கூட்டத்தை நமது மாவட்டத்தில் கூடிய விரைவில் கூட்டுமாறு வேண்டுகிறோம். மேலும் இக்குழுவில் மின்சார வாரியம், துறைமுக பொறுப்புக் கழகம், விமான நிலையம் மற்றும் இந்திய மருத்துவக்கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் நியமிக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.