ஏப்ரல் 26ல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

வீ ஆர் யுவர் வாய்ஸ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், வ. உ. சிதம்பரம் கல்லூரி
இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற
ஏப்ரல் மாதம் 26ம் தேதி தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் நடைபெறுகின்றன.

கடந்த 5 வருடமாக நடைபெறும் வீ ஆர் யுவர் வாய்ஸ் வேலை வாய்ப்பு முகாமின் 12வது
நிகழ்வாகும். இதில் 10,12, தொழிற்படிப்பு (ITI), பட்டப்படிப்பு (Degree) படித்த கை / கால்
பாதிக்கப்பட்ட, காது கேட்காத / வாய் பேச இயலாத / குறைந்த கண் பார்வை உள்ள
மாற்றுத்திறனாளிகள் பங்கு பெறலாம்.

மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் பங்கு பெறலாம்.

ஏப்ரல் 26ல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்
http://www.weareyourvoice.org

முன்பதிவு அவசியம்

இம்முகாமில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், நிறுவனங்கள் மற்றும்
தன்னார்வலர்கள் தொடர்புக்கு www.weareyourvoice.org & 75575 50888 , 75575 50999.

சிறப்பு அம்சங்கள்

  1. இதில் பங்கு பெற எந்த கட்டணமும் கிடையாது.
  2. நுற்றுக்கணக்கான நிறுவனங்களை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு.
  3. சுயதொழில் மற்றும் கடன் உதவிகள் சார்ந்த விளக்கங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
  4. மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தும் பல்வேறு
    நலத்திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  5. பல்வேறு தொண்டு நிறுவனங்களையும், அவர்களது சேவைகளை பற்றியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு.