தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பொது மேலாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்சிஏ அல்லது அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர் ஆவர். அனுபவம்: வங்கியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் குறைந்தது 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி இடம்: சென்னை. சம்பளம்: ரூ.1.40 லட்சம், வயது: 45, விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2020
இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/newregisterbase.do?id=GMI&post=GMI20202101 என்ற இணையதளம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 10.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tmbnet.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.