வலையில் சிக்கிய அபூர்வ எலி பூச்சி நண்டு – புதுச்சேரி

புதுச்சேரி மூர்த்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் கலைஞானம் வழக்கம்போல் சக மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். மீன் பிடித்துவிட்டு கரை திரும்பியதும், வலையில் இருக்கும் மீன்களை வெளியே எடுக்கும் போது நண்டு போன்ற அரியவகை எலி பூச்சி சிக்கியிருப்பதை கண்டு ஆச்சார்யமாக பார்த்தார். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், நிலத்தில் உள்ள எலியைப் போன்று தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினம், நண்டு வகையைச் சேர்ந்த மச்ச நண்டு என அழைக்கப்படுகிறது. இதன் உயிரியியல் பெயர் எமிரிட்டா ஆசியாடிக்கா இவை பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை. இதன் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும் தன்மை உண்டு என அதிகாரிகள் கூறினர். மருத்துவ குணம்கொண்ட இந்த எலி பூச்சியை ஏலம் விட்டால் சுமார் 5 ஆயிரம் வரை விலை போக வாய்ப்புள்ளது. ஆனால், இந்த எலி பூச்சியின் மருத்துவ குணத்தால் அதனை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு விட்டதாக கலைஞானம் தெரிவித்துள்ளார்.