தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.

திருநெல்வேலி ஜங்சனை சேர்ந்தவர் மைதீன் மகன் ஜலால் , ஆதரவற்ற முதியவரான இவர் கடந்த 12ம் தேதி கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார். அவரை சமூக ஆர்வலார்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்ப்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை 1.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.