கொரோனா தொற்று நோயில் இருந்து 8 பேர் குணமடைந்தனர்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8பேர் இன்று குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்ட்டனா். அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவர்கள் தொடா்ந்து 14 நாள்களுக்கு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினா்.

மேலும் சித்த மருத்துவப் பிரிவில் இருந்து மருத்துவர்கள் செவிலியர்கள் வந்திருந்து மாத்திரை மற்றும் மற்றும் லேகியங்களையும் கொடுத்து அதன் செயல் விளக்கங்களையும் செய்தார்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.