தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இணையவழி மூலம் கல்வி

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், மாநகராட்சி பள்ளி குழந்தைகள் தற்போதைய கொரோனா தொற்று பரவல் காலத்தில் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்கும் வகையில் கடந்த ஜூன் 1 முதல் 10 வரை பலவேறு கல்வி சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் தனித்திறமை வாய்ந்த கல்வியாளர்களைக் கொண்டு இணையவழியாக மாணவர்களுக்கு தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாக அறிவு சார்ந்த பயிற்சிகள் Zoom செயலி மூலம் வழங்கப்பட்டது.

மேற்படி இணையவழி பயிற்சியினைத் தொடர்ந்து ஆங்கில மொழியை விளையாட்டாக கற்பிக்கும் முறையில் 6, 7 மற்றும் 8 வகுப்பு பயிலும் மாணவர்களின் மனநிலைக் கேற்றவாறு பயிற்றுவிக்கும் வகையில் ELF Learning Solution Chennai என்னும் கல்வி சார்ந்த அமைப்பு மூலம் Aaha Guru செயலி வாயிலாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி பயிற்சியானது 22.6.2020 முதல் 03.07.2020 வரை இடைப்பட்ட காலங்களில் விடுமுறை தினங்கள் நீங்கலாக தினசரி மாலை 4.00 மணி முதல் 5.15மணி Meeting ID: 83190654451 Password : 9GUhhD) மற்றும் 05.15 மணி முதல் 6.30 மணி (Meeting ID:876 6802 9137 Password : 210216) வரையிலும் ஆங்கில கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள செயலி வாயிலாக தொடர்பு கொண்டு பயன்பெறலாமென மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.