தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இன்று (5-ஆம் தேதி) நடைபெற இருந்த குருத்தோலை ஊர்வலங்கள் மற்றும் பொது வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிலிருந்தே ஜெபிக்க வேண்டும் என்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே வருகின்ற புனித வாரமான திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை துக்க தினமாக கடைபிடிக்கபடுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளி ஆகிய நாட்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். மேலும் தொடர்ந்து இயேசு கிறிஸ்து உயிர் தெழுந்த திருநாளை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை ஞயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றன. இந்த ஆண்டு, ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற வேண்டிய புனித வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பொது வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகள் மற்றும் இணைய தளங்கள் வழியாக ஒரு சில ஆயர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர். உலகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு மற்றும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசின் உத்தரவை பின்பற்றி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
