முதல்வர் பழனிச்சாமி

மாண்புமிகு தமிழக முதல்வர் வருவதையோட்டி திருச்செந்தூர் – தூத்துக்குடி போக்குவரத்து மாற்றம்..

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழாவிற்கு திருச்செந்தூருக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 22.02.2020 அன்று வருகை தர இருப்பதால் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணம் செய்யும் பொது மக்களின் வசதிக்காக 22.02.2020 அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மட்டும் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் செய்துள்ளனர்.

அதன்படி திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள், கன ரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும், திருச்செந்தூரிலிருந்து குரும்பூர், ஏரல், சாயர்புரம், புதுக்கோட்டை வழியாகவும் அல்லது குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், பேட்மாநகரம், வாகைக்குளம், புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்வதற்கும், அதே போன்று தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டை, சாயர்புரம், ஏரல், குரும்பூர் வழியாகவும் அல்லது புதுக்கோட்டை, வாகைக்குளம், பேட்மாநகரம், ஸ்ரீவைகுண்டம் வழியாகவும் திருச்செந்தூர் செல்வதற்கும் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே பயணம் செய்யும் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து மேற்படி இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி போக்குவரத்து சிரமமில்லாமல் பயணம் செய்யுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.