தூத்துக்குடி மாநகராட்சி தற்காலிக பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மூலம் பேருந்துகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் கொரானா தொற்று ஏற்படாத வகையில் வைக்கப்பட்டுள்ள கை கழுவும் இடத்தில் பொதுமக்கள் கை கழுவுவதையும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வதையும் மற்றும் விழிப்புணர்வு பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் (19.03.20) பார்வையிட்டு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் திரு.வீ.ப ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்கள் உடன் இருந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான திரையரங்குகள் வணிக வளாகங்கள் பயிற்சிக் கூடங்கள் பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தையும் தற்காலிகமாக மூடவும் தெரிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் காயம் ஏற்படாத வகையில் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரானா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கை கழுவும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பணியாளர்களை நியமித்து கை கழுவும் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப் படுகிறது. மேலும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வாழும் அலுவலகங்களிலும் உடல் வெப்பநிலை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 48 நபர்களை சுகாதாரத்துறை மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை கொரானா தொற்று நோய் எதுவும் அவர்களுக்கு ஏற்படவில்லை. கொரானா தொற்று ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் நோய்த் தொற்றினால் பாதுகாக்கப்பட்ட உள்ள நபர்களை அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் முகமூடி சோப்பு கிருமிநாசினி ஆகியவை தயாரிப்பதற்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.
கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திரு சரவணன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோட்ட மேலாளர் திரு கண்ணன் மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.அருண்குமார் வ.உ.சி துறைமுக மருத்துவமனை மருத்துவர் மரு.பிரவீன் சுகாதார ஆய்வாளர் திரு.ஸ்டாலின் மற்றும் அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.