தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளாத்திகுளத்தில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு

கொரோனா தொற்றால் விளாத்திகுளத்தில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதியையும், வேம்பார் சோதனைச் சாவடியையும் நேற்று (12.07.2020) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் திரு. பத்மநாபன் பிள்ளை மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.