டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கும் கால அவகாசம் – வட்டார போக்குவரத்து அதிகாரிகள்

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க இதுவரை 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இனி ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்குள் புதுப்பிக்க தவறினால் ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் முன்னிலையில் தங்களது வாகனத்தில் 8 போட்டு பாஸ் ஆனால்தான் ஓட்டுனர் உரிமம் கிடைக்கும். இந்த புதிய நடைமுறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது’ என்றார்.