“ராஜா டாக்டர்”- யார் இவர்? – நீட் ஆள்மாறாட்டத்தில் இவருக்கு என்ன தொடர்பு?

மருத்துவ படிப்பிற்க்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இதுவரை எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், நான்கு பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. இன்று அவர்கள் சிறையில் அடைக்கப்படலாம் என எதிபார்க்கபடுகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.எற்க்கனவே கைதான உதித் சூர்யா மற்றும் அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நீட் ஏஜென்டை தொடர்புகொள்ள, வெங்கடேசனின் நண்பர் சபி என்பவர் உதவியதாகத் தகவல் வெளியானது. இவர் ஒரு மருத்துவர் என்றும், வாணியம்பாடி, திருப்பத்தூரில் மருத்துவமனை வைத்துள்ளதாகவும், அவரை ‘ராஜா டாக்டர்’ எனப் புனைபெயர் கொண்டு அழைப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி தகவல் சேகரித்தது. சபி மூலமாக நீட் ஏஜென்ட், அனைவரையும் தொடர்புகொண்டு ஆள்மாறாட்ட வேலைகளைச் செய்ததாக கூறப்படுகிறது. அதனால், சபியை கைது செய்ய தீவிரம் காட்டியது சி.பி.சி.ஐ.டி!நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மருத்தவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இர்ஃபான் என்ற மாணவரின் சான்றிதழ்களில் சந்தேகம் எழவே, அவரைப் பற்றி தகவல் சி.பி.சி.ஐ.டி-க்கு கிடைத்தது. சி.பி.சி.ஐ.டி வருவதற்குள் இர்ஃபான் மொரீசியஸ் நாட்டுக்குத் தப்பிவிட்டார். இந்த இர்ஃபானின் தந்தை சபி என்பது கூடுதல் தகவல்.! இந்நிலையில், வாணியம்பாடியில் வைத்து சபியை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து பெறப்படும் தகவல்களால், நீட் ஏஜென்ட் பற்றிய தகவல்கள் பெற முடியும் என்கிறது சி.பி.சி.ஐ.டி. சபி விசாரணைக்காகத் தேனி உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துவரபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.