தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு ஏஆர்எஸ் ஆல்பம் 30 மாத்திரை வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு ஏஆர்எஸ் ஆல்பம் 30 மாத்திரை ஹோமியோபதி டாக்டர் பெலிக்ஸ் வழங்கினார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் அனைவருக்கும் மனிதநேயத்தோடு உதவி செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

அதுபோல் பத்திரிகையாளர்களுக்கு ஹோமியோபதி டாக்டர் பெலிக்ஸ், ஹோமியோபதி மருத்துவசங்க செயலாளர் டாக்டர் பாதுஷா, ஆகியோர் பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஏஆர்எஸ் ஆல்பம் 30 மாத்திரைகளை மன்ற தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் சீனிவாசன், கௌரவ ஆலோசகர் அருண் ஆகியோரிடம் வழங்கினார்கள்.

மன்ற உறுப்பினர்கள் ரவி, சதிஷ், கண்ணன், ஜெயக்குமார், மாரிராஜா, சாதிக், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.